வெள்ளூர் நடுநிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை ஆலோசனைக் கூட்டம் மற்றும் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசளிப்பும்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட மாணவர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கும் கூட்டம் மற்றும் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கும் விழா
 பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மு.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது விழாவில் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட வேண்டும்  பட்டாசுகளை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன
மேலும் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது விழாவில் ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சுவாமிநாதன் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments