3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மாவட்ட உள் விளையாட்டு அரங்க கட்டுமான இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்




புதுக்கோட்டை மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கட்டுமான இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடங்குகிறது.

மாவட்ட விளையாட்டு அரங்கம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த விளையாட்டு அரங்கத்தில் பார்வையாளர்கள் கூடம், தரைத்தளம் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடைபெற்றது. பணிகள் நடைபெற்று வந்த நிலையில் போதுமான நிதிகள் ஒதுக்கப்படாததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.

சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணி நிறைவடையாமல் பாதியில் உள்ளது. இந்த நிலையில் உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உள் விளையாட்டு அரங்கம்

உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கு நிதிகள் ஒதுக்க கருத்துருவைஅதிகாரிகள் தரப்பில் இருந்து அரசுக்கு சமீபத்தில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘உள் விளையாட்டு அரங்கத்தில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் 20 சதவீத பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இதில் பெரும்பாலும் இறுதிக்கட்ட பணிகள் தான். கட்டுமான பணிக்கு தேவையான நிதி குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் இறகு பந்து, வாலிபால், ஹேண்ட்பால் மற்றும் இதர விளையாட்டுகள் விளையாட முடியும்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments