புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு வரிசை எண் பதிவிட்டு படிவம் வினியோகம்




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு வரிசை எண் பதிவிட்டு படிவம் வினியோகிக்கப்படுகிறது.

தட்கல் டிக்கெட்

ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டில் தட்கல் மற்றும் சாதாரண முன்பதிவு என 2 முறை உள்ளது. இதில் தட்கல் முன்பதிவு பயண தேதிக்கு ஒரு நாளைக்கு முன்னதாக டிக்கெட் பெற முடியும். ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி உள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தட்கல் முன்பதிவுக்கு படிவத்தில் வரிசை எண் பதிவிட்டு வழங்கப்படும் என அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் தட்கல் டிக்கெட் படிவம் காலை 8 மணிக்கு வரிசை எண் மற்றும் தேதி எழுதி நிலைய முத்திரையிட்டு வழங்கப்படும். ஒரு நபருக்கு ஒரு படிவம் மட்டுமே வழங்கப்படும். தேதி, வரிசை எண் இல்லாத படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது. பெண்களுக்கு தனி வரிசை கிடையாது. இடைத்தரகர்கள் கண்காணிக்கப்படுவார்கள், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான நடைமுறை

இது குறித்து ரெயில் நிலைய அதிகாரியிடம் கேட்ட போது, ‘‘தட்கல் டிக்கெட் முன்பதிவுக்குரிய வழக்கமான நடைமுறை தான். பயணிகள் இதன் விவரம் தெரியவேண்டும் என்பதற்காக எழுதி ஒட்டப்பட்டுள்ளது. ரெயில் ஏ.சி. கோச் தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், படுக்கை வசதி டிக்கெட் முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும். காலையில் வழங்கப்படும் இந்த படிவத்தை கொண்டு வரிசையில் பயணிகள் வர வேண்டும். தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகள் அதிகம் வருவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments