அரபிக்கடல் டூ வங்காள விரிகுடா இந்தியா நிலப்பரப்பில் 3100 கீலோ மீட்டர் & 5 மாநிலங்களை கடந்து பயணிக்கும் ஒகா ⇋ இராமேஸ்வரம் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில்




14.11.2006 முதல் ஒகா ⇋ இராமேஸ்வரம் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது 



இராமேஸ்வரம் - ஒகா

வண்டி எண் 16733 இராமேஸ்வரம் - ஓகா  வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் இராமேஸ்வரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஓகா வந்தடையும்.




ஒகா - இராமேஸ்வரம் 

மறுமார்க்கமாக வண்டி எண் : 16734 ஒகாவில் இருந்து இருந்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணிக்கு புறப்படும் ரயில் வியாழக்கிழமை மாலை 07.25 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்





வழித்தடம் 

இந்த ரயில்  மானாமதுரை மதுரை திண்டுக்கல் கரூர் சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி  கடப்பா பண்பாடு ஹைதராபாத் நிஜமாபாத் அவுரங்காபாத் சூரத் வதோதரா அகமதாபாத் ராஜ்கோட் வழியாக இயங்கி வருகிறது.

மொத்தமாக 48 ரயில் நிலையங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்கிறது

காசிக்குடா ரயில் நிலையம் - ஹைதராபாத்தின் முக்கிய ரயில் நிலையம் 

தமிழ்நாட்டில் எங்கே எங்கே நின்று செல்லும் ??

மண்டபம் இராமநாதபுரம் பரமக்குடி மானாமதுரை மதுரை திண்டுக்கல் கரூர் நாமக்கல் ராசிபுரம் சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி (வேலூர்)

புதிய பாம்பன் பாலம் பணிகள் 

குறிப்பு :  இந்த ரயில் தற்போது புதிய பாம்பன் ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இராமநாதபுரம் மாவட்டம்  மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. 




ஒகா 

பாகிஸ்தான் எல்லையில்  இந்தியாவின் குஜராத் மாநிலத்தில்  ஒகா அமைந்துள்ளது ஒகாவில்  இருந்து கடல் மார்க்கமாக 300+ கீலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான்  அமைந்துள்ளது 




இராமேஸ்வரம்

இலங்கையின் எல்லையில்  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  இராமேஸ்வரம் அமைந்துள்ளது
இராமேஸ்வரத்தில்  இருந்து கடல் மார்க்கமாக  30 கீலோ மீட்டர் தொலைவில் இலங்கை  அமைந்துள்ளது 




5 மாநிலங்கள்

ஓகா - இராமேஸ்வரம்  வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத் மஹாராஷ்டிரா  தெலுங்கானா ஆந்திரா பிரதேசம்  தமிழ்நாடு 5 மாநிலங்கை கடந்து பயணிக்கிறது..

மொத்தத்தில்  இரண்டு நாடுகள் எல்லைகள் 5 மாநிலங்கள் கடந்து பயணிக்கும் ரயிலாக அமைந்துள்ளது ஒகா - இராமேஸ்வரம்  வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments