கோட்டைப்பட்டினம் பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி: ஆதார் சிறப்பு முகாமை நடத்தும் கோட்டைப்பட்டினம் ஊராட்சி
கோட்டைப்பட்டினம் ஊராட்சி சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் வருகிற 16/11/2023 வியாழன், 17/11/2023 வெள்ளி மற்றும் 18/11/2023 சனி ஆகிய மூன்று நாட்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே அதில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சிறப்பு முகாமில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த சேவையை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு...
தலைவர்
ஊராட்சி மன்றம்
கோட்டைப்பட்டினம்.

தகவல்: ஆனா.அக்பர் அலி,  
துணைத் தலைவர்,
கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments