திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி ரயில் பாதை மின்மயமாக்கலுக்கு 72 கோடி ரூபாய் செலவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது




தெற்கு ரயில்வே, திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி ரயில் பாதை149 கிலோமீட்டர் தூரம் கொண்டது.

இந்த ரயில் பாதையை மின்மயமாக்க ரயில்வே துறை 72 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கீடு  செய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில், மேட்டுப்பாளையம் ,
ஊட்டி ரயில் பாதை தவிர அனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளும் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுவிட்டது 

அதே போல் அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்கல் பணிக்கு  ரயில்வே வாரியம்  ஒப்புதல் அளித்து பணிகளை செய்து வருகிறார்கள். 

செங்கோட்டை - புனலூர் ரயில் பாதை பணி மற்றும் மதுரை - தேனி- போடி மின்மயமாக்கல் பணி துரிதபடுத்தப்பட்டு வேகமாக நடைபெறுகிறது.  

சமீபத்தில் திருத்துறைப்பூண்டி- வேதாராணியம்- அகஸ்தியம்பள்ளி( 37 கீமி ) ரயில் பாதை சுமார் 23 கோடி ரூபாய் செலவில் மின்மயமாக்கல் பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டது.  

தற்போது திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - பேராவூரணி- அறந்தாங்கி- காரைக்குடி ரயில் பாதை (148 கீமி) மின்மயமாக்கல் பணிக்கு  சுமார் 72 கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது .

இப்பணிகள் 2024 ஆண்டு அக்கோடபர்க்குள்  பணி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாதை மின்மயமாக்கல் முடிந்தால் தென்னக ரயில்வேயில் நூறு சதவீதம் மின்மயமாக்கல் முடிந்துவிடும்.  

மின் மயமாக்கல் பணி முடிந்தபிறகு பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மின்சார ரயில் இஞ்சின்கள் மூலமாக இயக்கப்படும் .

டீசல் ரயில் இஞ்சின்கள் தேவையிருக்காது.

இதனால் டீசல் பயன்பாடுகுறையும் . ரயில்வேக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்.
காற்று மாசு குறைக்கப்பட்டு
சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும் 

திருவாரூர் சந்திப்பில் டீசல் ரயில் இஞ்சின், மின்சார ரயில் இஞ்சின் மாற்றம் தேவையிருக்காது.
 இதனால் பயண நேரம் தாமதம் ஆகாது.
மின்மயமாக்கல் முடிந்த பிறகு அதிக அளவில் விரைவு ரயில்கள் பயணிகள் ரயில்கள் சரக்கு ரயில்கள் இயக்கப்படும் 

திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் பாதையை மின்மயமாக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்த புள்ளி அறிவித்து பணிகளை துவங்கியமைக்கு ரயில் பயணிகள்  , வர்த்தகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்திய இரயில்வே அமைச்சர் இரயில்வே வாரிய தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ,திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments