உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதுக்கோட்டையில் ரூ.537¼ கோடியில் தொழில்கள் தொடங்க அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு வருகிற ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னையில் நடத்த உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக புதுக்கோட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்களில், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார்.
ரூ.537¼ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கருத்தரங்கை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அமைச்சர்கள் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலீட்டிற்கான இலக்காக ரூ.500 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.537.27 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.
இதன்மூலம் 1,780 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இம்முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றைச்சாளர முறையில் பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கடன் உதவி
நிகழ்ச்சியில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் ரூ.55.69 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி, புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் நலச் சங்கத் தலைவர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.