ஆற்றாங்கரை கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.1 லட்சம் சொந்த நிதி நவாஸ் கனி எம்.பி. வழங்கினார்




ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மீனவர்கள் கிராமமான ஆற்றாங்கரையில் வசித்து வரும் ஏராளமான இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பரிசுகளையும் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்த இளைஞர்களுக்கு ஆற்றாங்கரை கிராமத்தில் அதற்கான விளையாட்டு மைதானம் இல்லாமல் நீண்ட காலமாக மணலில் விளையாடி வருகின்றனர். ஆற்றாங்கரை இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகள் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஒரு தனி குழு அமைத்து அதற்கான நிதிகளை திரட்டி வருகின்றனர். இந்தநிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.யை நேரடியாக சந்தித்து புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நிதி வழங்கி உதவிட கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில் ஆற்றாங்கரை விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் அளவில் அவரது சொந்த நிதியில் விளையாட்டு மைதானம் அமைத்திட ரூ.1 லட்சம் காசோலையை இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினாா். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கு வாலிபர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments