தொண்டி பேரூராட்சியில் வீடு, வீடாக நிலவேம்பு குடிநீர் வினியோகம்
தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக ஆங்காங்கே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இதையொட்டி தொண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சியில் உள்ள 15 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ஒட்டுமொத்த சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பேரூராட்சி பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல், கொசு புழுக்கள் ஒழிப்பு மருந்துகள் ஊற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஸ்தூர் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடையே டெங்கு தடுப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தொடங்கி வைத்தார். இப்பணிகளை பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், செயலாளர் மகாலிங்கம், மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments