பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் இதுவரை புதுக்கோட்டை விவசாயிகளுக்கு ரூ.321½ கோடி வினியோகிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நிதி உதவி
பிரதம மந்திரி விவசாயிகளின் கவுரவ நிதித்திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஏப்ரல்-செப்டம்பர், ஆகஸ்டு-நவம்பர், டிசம்பர்-மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு அவர்களது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்தல், இணையதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
30-ந் தேதி கடைசி நாள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 290 விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் விவசாயிகள் போர்வையில் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 4,723 விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர்.
மேலும் பி.எம்.கிசான் இணையதளத்தில் விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவேற்றாமல் 3,064 பயனாளிகள் உள்ளனர். இவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையம் இயங்கி வருவதாகவும், இதனை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரூ.321½ கோடி வினியோகம்
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் 14-வது தவணை தொகையுடன் இதுவரை மொத்தம் ரூ.321 கோடியே 59 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். முதல் தவணை தொகையை 1 லட்சத்து 44 ஆயிரத்து324 விவசாயிகள் பெற்று பயன்அடைந்துள்ளனர். அதன்பின் இத்திட்டத்தில் சில விதிமுறைகள், நடைமுறைகள் மாற்றப்பட்ட பின் விவசாயிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. தற்போது 14-வது தவணை தொகை 67 ஆயிரத்து 810 விவசாயிகளுக்கு ரூ.13.56 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.