அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டி வயல்-கருங்குழிக்காடு கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரியமாடு, நடு மாடு, கரிச்சான் மாடு, புது பூட்டு மாடு என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டி போக வர 8 கிலோ மீட்டர் தூரமும், நடுமாடு வண்டிக்கு போக வர 6 கிலோ மீட்டர் தூரமும், கரிச்சான் மாடுக்கு போக வர 5 கிலோ மீட்டர் தூரமும், புது பூட்டு மாடுக்கு போகவர 4 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

பரிசு

மாட்டு வண்டிகள் பந்தய எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பந்தயத்தில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு, புது பூட்டு மாடு ஆகிய பரிவுகளில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயம் நடைெபற்ற அறந்தாங்கி- கட்டுமாவடி சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்து கண்டுகளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments