தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி - சாயல்குடி மாநில சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்ய கீரமங்கலம் ஊர் மக்கள் முதல்வருக்கு கடிதம்
தஞ்சாவூர் - சாயல்குடி மாநில சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்ய கீரமங்கலம் ஊர் மக்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள் 

இது குறித்து கீரமங்கலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

எங்கள் ஊரான கீரமங்கலம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் - 29 தஞ்சாவூர் - சாயல்குடி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்ய எங்களின் கோரிக்கை

வணக்கம் ஐயா,

மாநில நெடுஞ்சாலை - 29 தஞ்சாவூர் - சாயல்குடி மாநில நெடுஞ்சாலை ஆகும் இதன் தூரம் சுமார் 300 கிமீ தூரம் கொண்டது. இந்த நெடுஞ்சாலையானது தஞ்சாவூர், புதுக்கோட்டை,, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களை இணைக்கிறது. இந்த மாநில நெடுஞ்சாலையில் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, காளையார்கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய நகராட்சி பகுதிகளையும் இணைக்கிறது எனவே இந்த மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும். 

2018 ஆம் ஆண்டு இந்த சாலையை காரைக்குடி - அறந்தாங்கி -பட்டுக்கோட்டை வரை நான்கு வழிச் சாலையாக மாற்றம் செய்ய அறிவிப்பு வெளியானது ஆனால் இன்று வரை நான்கு வழிச் சாலையாக மாற்றம் செய்யும் பணிகள் ஆரம்பம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 எனவே தமிழக அரசானது இந்த மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!!!

இப்படிக்கு

ஊர் பொதுமக்கள்

கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள

பொதுமக்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments