சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் 1/12/2023 முதல் 24/01/2024 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவிப்பு




இருமுடி கட்டி செல்லுதல் மற்றும் தைப்பூச திருவிழாவையொட்டி, பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 25-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் பாண்டியன், பொதிகை, நாகர்கோவில், வைகை, சேலம், கொல்லம், உழவன், சிலம்பு, ராமேசுவரம், மன்னார்குடி, புதுச்சேரி உள்பட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அந்தியோதயா, ஹம்சபார், லோக்மான்ய திலக், சம்பர்க் கிராந்தி உள்பட வெளிமாநில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என மொத்தம் 43 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் நின்று செல்லும். மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இது குறித்து பட்டுக்கோட்டையை சேர்ந்த  விவாகானந்தம் அவர்கள் கூறுகையில்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய தைப்பூச விழாவிற்கு   மேல்மருவத்தூருக்கு  செல்லும் பக்தர்கள் நலன்கருதி  தெற்கு ரயில்வே மேல் மருவத்தூர் ரயில் நிலையம் வழியாக செல்லும்  43 விரைவு ரயில்கள்  இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல  உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 01-12- 2023 முதல் 25.01.2024 வரை  இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்.

இதன் மூலம்  அறந்தாங்கி  பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி   பகுதியில் இருந்து மேல்மருவத்தூருக்கு செல்லும் ஆதிபராசக்தி பக்தர்கள் பயனடைவார்கள்.




20684 செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவு ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை இரவு 10 .50 மணிக்கு  பட்டுக்கோட்டை வந்தடைந்து தொடர்ந்து தாம்பரத்திற்கு சென்று கொண்டுள்ளது இந்த ரயில் 01.12.2023 முதல் 24.01.2024 வரை மேல்மருவத்தூரில் அதிகாலை 4 .28 மணிக்கு இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்  

20683 தாம்பரம் செங்கோட்டை அதி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை க்கு சென்று வருகிறது மேல்மருவத்தூருக்கு இரவு 9:48 மணிக்கு வந்து  இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். இந்த ரயில்  பட்டுக்கோட்டைக்கு திங்கள் ,புதன் ,வெள்ளி அதிகாலை 3 .25 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வந்து புறப்பட்டு செல்லும்

பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து செல்லும் ஆதிபராசக்தி பக்தர்கள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ள லாம்.

மேல்மருவத்தூரில் ரயில் நிறுத்தம் கொடுத்த தெற்கு ரயில்வேக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள் 

மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருடந்தோறும்  தைப்பூச விழாவிற்கு  சென்று வருகின்றனர்

தாம்பரம் செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவு ரயில் நீண்ட தூரம் செல்வதால் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பக்தர்களுக்கு இந்தரயிலில் இடம் கிடைப்பது சிரமமாக இருக்கும்

மேலும்  பெண் பக்தர்கள் மாலை அணிந்து  குழுவாக செல்வதால்  தெற்கு ரயில்வே காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக மேல்மருவத்தூர் தைப்பூச நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை தில்லைவிளாகம் திருத்துறைப்பூண்டி பகுதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்த கோரிக்கை அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து வைக்கப்பட்டு வருகிறது.

மீட்டர் கேஜ் காலத்தில் மேல்மருவத்தூருக்கு பட்டுக்கோட்டையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments