கடலில் லைட் வெளிச்சத்தில் மீன்பிடித்தால் படகு பறிமுதல்
தொண்டி கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என மரைன் போலீசார் எச்சரித்தனர்.தொண்டி பகுதியில் சில நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று அதிக ஒளி தரும் லைட் வெளிச்சத்தில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஜெனரேட்டர் வசதியுடன் ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் கம்பங்களில் அதிக வெளிச்சம் உள்ள பல்புகளை கட்டி வெளிச்சத்தை காட்டுகின்றனர்.இந்த வெளிச்சத்திற்கு முரல், நண்டு, கணவாய் உள்ளிட்ட பல வகை மீன்கள் கடலுக்குள் இருக்கும் போது லைட் வெளிச்சத்தை பார்த்தவுடன் மொத்தமாக கடலுக்கு மேலே வரும். வலையை விரித்து மொத்தமாக பிடிப்பதால் அதிக லாபம் கிடைப்பதால் சில மீனவர்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

தடையை மீறி செயல்படும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரத்தில் நடந்த மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் நம்புதாளை மீனவர்கள் மனு அளித்தனர். இதையடுத்து நேற்று காலை தொண்டி புதுக்குடியில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், கடலோர காவல் குழும அமலாக்கபிரிவு எஸ்.ஐ. குருநாதன், ஏட்டு ரமேஷ், பூவலிங்கம், சாகர்மித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர். இனிவரும் நாட்களில் தடையை மீறி லைட் வெளிச்சத்தில் மீன்பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments