கழிவுநீர் வாய்க்கால் கேட்டு நடக்க இருந்த மறியல் வாபஸ் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு
ஆவுடையார்கோவில் நான்கு வீதிகளிலும் கழிவுநீர் செல்ல முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் காளிதாஸ் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட இருந்தனர். இந்த நிலையில் அவர்களுடன் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம், ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி, போலீசார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் குளத்துக் குடியிருப்பு சுப்பிரமணியன், நெருப்பு முருகேஷ், கூத்தபெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 4 வீதிகளில் உள்ள கழிவுநீரை அகற்ற உடனடியாக வாய்க்கால் அமைத்து தர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments