மணமேல்குடி ஒன்றியத்தில் இலக்கிய மன்ற போட்டிகள் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான  பேச்சுப்போட்டி , கட்டுரை போட்டி, கவிதை போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய இலக்கிய மன்ற போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியினை மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு  சிவயோகம் தொடங்கி வைத்தார்.

 நடுவர்களாக ஆசிரியர்கள் ஜோக்கின் ராய், இளங்கோ வடிவேல் செந்தில் பாண்டி, பிரதாப் சிங், ஜெயானந்த்,  , இளங்கோவன், ரேகா மற்றும்  மணிமுத்து ஆகியோர் செயல்பட்டனர். இந்நிகழ்வில் 12 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments