திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு




காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயக்கப்பட்ட  சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண் 06069 /06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண விரைவு ர‌யி‌ல் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு (10 சேவைகள்) நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 30-11-2023 முதல் 24-01-2024 வரை வாராந்திர சேவையாக இயக்கப்படும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்தி:

வண்டி எண் : 06070  திருநெல்வேலி  -  சென்னை எழும்பூர் 

வண்டி எண் : 06070  திருநெல்வேலியில்  ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் மாலை 6-45 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் சென்னை எழும்பூர் சென்றடையும் 

வண்டி எண் : 06069 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ‌-

மறுமாா்கத்தில் 
வண்டி எண் : 06068 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி -  இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்  வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3-00 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் 

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நேர அட்டவணை 



சிறப்பு விரைவு ரயில் எங்கே எங்கே நின்று செல்லும் ??

திருநெல்வேலி சந்திப்பு,
கோவில்பட்டி,
சாத்தூர்,
விருதுநகர் சந்திப்பு ,
அருப்புக்கோட்டை ,
மானாமதுரை சந்திப்பு,
சிவகங்கை,
காரைக்குடி சந்திப்பு,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,
அதிராம்பட்டினம்,
முத்துப்பேட்டை,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
மயிலாடுதுறை சந்திப்பு,
சீர்காழி,
சிதம்பரம்,
கடலூர் துறைமுகம் சந்திப்பு,
விழுப்புரம் சந்திப்பு,
செங்கல்பட்டு சந்திப்பு,
தாம்பரம்,
சென்னை எழும்பூர் 

ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த சிறப்பு விரைவு ரயிலில்

AC Two Tier - 1
AC Three Tier - 6
SL Class - 9
GS (UR) - 4
சரக்கு பெட்டி - 1
மாற்றுத்திறனாளிகள் பெட்டி - 1 என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபகியோப்பாளர் உறுப்பினர் ஆலத்தம்பாடி வெங்கடேசன் கூறுகையில்

அகலப்பாதை மாற்றத்திற்கு பின் திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி அருப்புகோட்டை விருதுநகர் வழியாக இயக்கப்படும் மூன்றாவது விரைவு ர‌யி‌ல் சேவையாகும்

 ஏற்கனவே வண்டி எண் 20683 /20684 தாம்பரம் செங்கோட்டை வாரம் மும்முறை அதிவிரைவு ரயில்,

வண்டி எண் 16361 /16362 எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது

கிருஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் திருநாள் விடுமுறையில் சொந்த ஊர் வந்து செல்ல இந்த சிறப்பு கட்டண விரைவு ர‌யி‌ல் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

இது குறித்து ரயில் ஆர்வலர் முத்துப்பேட்டை சூர்யா கூறுகையில்

பயணிகளுக்கு நற்செய்தி நமது அனைவரின் கோரிக்கையை ஏற்று தீபாவளி சிறப்பு இரயிலாக இயங்கிய வண்டி எண் 06069/06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வழி (காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர்) 1/12/2023 முதல் 26/1/2024. ஜனவரி வரை பொங்கல் பண்டிகைக்கு ஏதுவாக நீட்டிக்கபடுகிறது...

 இதன் மூலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஊர்களுக்கு வர நேரடி இரயில் நமக்கு கிடைக்கிறது..

இந்த இரயில் வியாழன் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் க்கும்

வெள்ளி. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி க்கும் வாராந்திர இரயிலாக இயங்கும்.

PC Credit : Surya 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments