மணமேல்குடி ஒன்றியத்தில் வானவில் மற்றும் சிறார் திரைப்படப் போட்டிகள் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்களின் தலைமையில் போட்டிகள் தொடங்கியது.
 வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.

வானவில் மன்றத்தில் அறிவியல் நாடகம்,அறிவியல் செயல்திட்டம், மற்றும் அறிவியல் கண்காட்சி மற்றும்  திரைப்பட மன்றத்தில் தனி நடிப்பு, திரை விமர்சனம் மற்றும்  குறும்படம் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியின் நடுவர்களாக ஜோக்கின் ராய் செந்தில் பாண்டி பிரதாப் சிங் ஜெயானந்த் ஸ்ரீமதி மாரியம்மாள்,    சகிலா பானு, கவிதா, தங்கராஜ், பைரோஸ், சண்முகம் பிரியா மற்றும் ஜெனிட்டா ஆகியோர் செயல்பட்டனர். இந்நிகழ்வில் 16 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments