திருச்சி-புதுக்கோட்டை- அறந்தாங்கி - மீமிசல் சாலை விரிவாக்க பணிக்கான ரத்து செய்யப்பட்ட ஒப்பந்த பணிகளை மீண்டும் நடத்தவும், ஒப்பந்த நடைமுறைகளை ரத்து செய்த செய்பொறியாளர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த கோரிய வழக்கில், செயற்பொறியாளர் செயல்பாடு அதிருப்தி அழிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணக்கு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி-புதுக்கோட்டை- அறந்தாங்கி - மீமிசல் சாலை விரிவாக்க பணி
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை
மனு குறித்து நெடுஞ்சாலை துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் சாய் ஹிருதம் என்ற தனியார் நிறுவனத்தின் மேலாளர். எங்கள் நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு டெண்டர் பணிகள் மூலம் அரசு கட்டிடங்கள், நெடுஞ்சாலைகளை புதுப்பித்தல், அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகின்றோம்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி-புதுக்கோட்டை- அறந்தாங்கி - மீமிசல் வழி செல்லும் இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் பலப்படுத்தும் பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது.
அரசின் இணையதளத்தில் இருந்து டெண்டருக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதனை உரிய ஆவணங்களோடு பூர்த்தி செய்து அதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க முயன்ற போது, பணிநிலை சான்றிதழ் கேட்டனர்.
நெடுஞ்சாலையின் பொறியாளர் விவகாரம்:
இந்நிலையில் பணி நிலை சான்றிதழ் கேட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்த போது, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி டெண்டரில் கலந்து கொள்ள முடியாத படி செய்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சான்று பெற்றோம்.
இதனைத் தொடர்ந்து சாலை ஒப்பந்த பணிக்கான டெண்டர் கோரி விண்ணப்பம் செய்யபட்டது. அதனை தொடர்ந்து வைப்பு தொகையை நெடுஞ்சாலையின் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி அலுவலத்திற்கு சென்று செலுத்தினோம்.
ஆனால் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வேறு எந்த நிறுவனத்தினமும் வைப்புத்தொகை வேண்டுமென்றே பெறாமல் விட்டுவிட்டு இந்த சாலை ஒப்பந்தத்தில் எங்களது நிறுவனம் மட்டுமே பங்கு பெற்றுள்ளது என்பதால் இந்த டெண்டரை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை:
எங்களது நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை எடுக்கக் கூடாது என்றே தேசிய நெடுஞ்சாலையின் பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த பணியில் உள்ளார். ஏற்கனவே இது போன்று திட்டமிட்டு ஒப்பந்தங்களை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பெற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று செயல்பட்டுள்ளார்.
எனவே இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இரத்து செய்யபட்ட ஒப்பந்த்த்கை மீண்டும் அறிவிக்க வேண்டும். அதில் தகுதியுள்ள எங்களது நிறுவனத்தை சாலை ஒப்பந்த பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்சாலையின் சாலை ஒப்பந்தத்திற்கான இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. செயற்பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையிலும் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் என வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதி செயற்பொறியாளர் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரித்து மனு குறித்து தேசிய நெடுஞ்சாலை தரப்பில் விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.