மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம்


தஞ்சாவூர் மாவட்டம் ல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் ஜாலியாக உலா வருவதோடு சாலையின் நடுவே ஓய்வெடுக்கவும் செய்கின்றன.

பொதுவாக இரவு நேரங்களில் சாலைகளில் அதிகமான மாடுகள் அமர்ந்திருப்பதாலும், குறுக்கே ஒடுவதாலும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. மேலும் இதனால் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே சரேபந்திரராஜன்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி தொடக்கம் வரை சுமார் 40 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையான இந்த கிழக்கு கடற்கரை சாலையில், தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரை முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் என முக்கியமான ஊர்களும் அமைந்துள்ளது.மேலும், ராமேஸ்வரம், ராமநாதபுரம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் கார்களிலும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உரம், மீன், கருவாடு உள்ளிட்ட வியாபார பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.

மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில், தினசரி அதிகமான கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும் 

எனவே, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments