தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டு அவை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் இருப்பதால் சாலையில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்து அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில்தான் இதுபோன்ற விமர்சனங்கள் அதிகம் கிளம்புகின்றன. தரமான சாலைகள் போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு இட்டுள்ள போதிலும் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து கிளம்பி வருகின்றன.
ஒப்பாந்தகாரர்கள் உரிய முறையில் சாலைகள் அமைப்பது இல்லை என்றும், தரமற்ற நிலையில், சாலைகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில்தான், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக புகார்கள் கிளம்பியுள்ளன.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டு அவை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கடைத்தெருவில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் முதல் பலரும் இந்த சாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை கொண்ட பாதை முழுவதும் நீரில் மூழ்கி பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் என அனைவருமே கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதேபொல் சாலையில் தேங்கி கிடக்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இதனிடையே, குண்டு குழியுமான சாலைகளில் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக சாலையை ஒழுங்குப்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில், சாலையில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்து இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. இந்த நிலையில், மக்களின் கடும் எதிர்ப்பை எடுத்து அந்த இடத்தில் தண்ணீர் தேங்காத வகையில் ஜல்லிக்கற்களை நகராட்சி நிர்வாகம் கொட்டிச் சென்றுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.