புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது

 
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

அடிப்படை வசதிகள்

ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்ருத் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் இத்திட்டத்தில் தேர்வாகியுள்ளது. பழமையான புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் ரெயில்வேக்கு வருவாயும் அதிகரிக்கிறது. இதற்கிடையில் சரக்கு ரெயில் போக்குவரத்தில் அரிசி, நெல், உர மூட்டைகள் புதுக்கோட்டைக்கு அதிகளவில் வருகின்றன.

கண்காணிப்பு கேமராக்கள்

இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ருத் திட்டத்தில் வளர்ச்சிப்பணிகளாக லிப்ட் வசதி, நடைமேடையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றமும் புதுப்பொலிவு பெற உள்ளது. பயணிகளுக்கான காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவை வர உள்ளன. 

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தற்போது வரை கண்காணிப்பு கேமராக்கள் வசதி இல்லை. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ன.

இது‌ குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், வெளிப்பகுதி என 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும்' என்றனர். 

இதன் மூலம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனியாக கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments