2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இராமநாதபுரம் தொகுதியை கேட்போம்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேட்டி





இராமநாதபுரம் மாவட்டம்  திடல் பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகி இல்ல விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் ெமாய்தீன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ராமநாதபுரம் தொகுதியை தி.மு.க. கூட்டணியில் கேட்டு பெறுவோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்.

தென் மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து அரசை குறை கூறமுடியாது. வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். பேட்டியின்போது நவாஸ் கனி எம்.பி., மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாநில செயலாளர் அப்துல் ஜபார், மாவட்ட தலைவர் வரிசை முகமது, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சீனி முஹம்மது, பேரூராட்சி தலைவர் ஷாஜகான் மாவட்ட பொருளாளர் யூனஸ் ஆலிம், இளைஞரணி அன்சாரி, திடல் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜபருல்லாகான் துணைத்தலைவர் தாகிர் உசேன், பொருளாளர் ஜாகிர் உசேன் முன்னாள் ஜமாத் தலைவர் முகமது இக்பால், ஆசிரியர் துரை பாண்டியன், ம.ம.க. மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர், பேரூராட்சி கவுன்சிலர் நாகூர் மீரா, உலமாக்கள் சபை சுலைமான் ஆலிம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments