புதுக்கோட்டையில் கார்களை வாடகைக்கு எடுத்து விற்ற கும்பல் கைதானநிலையில் அவர்களை பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
வாடகைக்கு எடுத்து விற்பனை
புதுக்கோட்டையில் கார்களை வாடகைக்கு எடுத்து சென்ற நபர் திரும்ப வராமல் போனது தொடர்பாக கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு பெறப்பட்டது. இந்த புகார் மனு மீதான விசாரணையில் கார்களை வாடகைக்கு எடுத்து சென்ற நபர், அந்த கார்களை அடமானம் வைத்தும், விற்றும் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இது தொடர்பாக சமீபத்தில் 2 பேரை கணேஷ்நகர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைதானவர்கள் பற்றிய வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
வாடகைக்கு கார் வேண்டும் என தெரிந்த ஒருவரிடம் காரை வாங்கி செல்ல வேண்டியது. பின்னர் அந்த காரை வேறு எங்காவது கொண்டு சென்று அடமானம் வைத்து விடுவது, அல்லது விற்றும் வந்துள்ளனர். தெரிந்த நபர்களிடமே இவர்கள் கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்துள்ளனர்.
10 கார்கள் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து மொத்தம் 10 கார்களும், ஒரு சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அடமானம் வைத்த மற்றும் விற்ற நபர்களிடம் இருந்து அந்த கார்கள் கைப்பற்றப்பட்டன. கார்களை விற்றதில் கிடைத்த பணத்தை கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். மேலும் 2 கார்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.