புதுக்கோட்டை மீனவர்கள் வலைகளில் சிக்கிய பால் சுறா வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்தனர்




புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. நேற்று முன்தினம் வழக்கம் போல் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்க கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று அவர்கள் கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் வலைகளில் அதிகளவு பால் சுறா மீன்கள் சிக்கி இருந்தது. இந்த வகையை சேர்ந்த மீன்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் சுரக்க உண்ணுவார்கள். இதனால் இந்த மீனுக்கு எப்பொழுதுமே கிராக்கி அதிகம். ஆனால் பால் சுறா மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவது அரிது. இதனால் இந்த மீன்களை வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments