'மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்' - புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை







வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
 அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதேபோல் டிசம்பர்.1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், வேலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மோசமான வானிலையால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments