அதிராம்பட்டினம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்
அதிராம்பட்டினம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயமடைந்தனர்.

சுற்றுலா வேன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது36), கணேஷ் (39), தமிழரசன்(34), ராஜகுமாரி(28) மற்றும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 17 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு வேனில் சுற்றுலா சென்றனர். சுற்றுலா சென்றுவிட்டு மதுரையில் இருந்து வேதாரண்யத்திற்கு வருவதற்கு அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேனில் 17 பேரும் வந்து கொண்டிருந்தனர். வேனை வேதாரண்யம் பகுதியை சேர்ந்த அருட்செல்வம் (46) என்பவர் ஓட்டினார்.

17 பேர் காயம்

நேற்று முன்தினம் இரவு அதிராம்பட்டினம் அருகே உள்ள மறவக்காடு வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வேன் வந்து கொண்டிந்தபோது, சாலையின் குறுக்கே மாடு சென்றது. இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே கவிழ்ந்தது. இதில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைத்து சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 5 குழந்தைகள், பெண்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 5-க்கும் மேற்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேதமடைந்த வேனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments