புதுக்கோட்டை வழியாக செல்லும் மங்களூர் - சென்னை தாம்பரம் இடையே ஒரு வழி கட்டண சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு (9 Services) தெற்கு ரயில்வே அறிவிப்பு





புதுக்கோட்டை வழியாக  செல்லும் மங்களூர் - சென்னை தாம்பரம் இடையே  ஒரு வழி கட்டண சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு (9 Services)  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

தென்னக ரெயில்வே சார்பில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அதனை தொடர்ந்து, மங்களூருவில் இருந்து புதுக்கோட்டை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06065) 02.12.2023 முதல் 27.01.2024 சனிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. (9 வாரத்திற்கு)

இந்த ரெயில் மங்களூருவில் இருந்து கோழிக்கோடு, எர்ணாகுளம் வழியாக இயக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் இருந்து குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில் மங்களூருவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.30 மணிக்கு குழித்துறை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 12.05 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கும், நள்ளிரவு 12.50 மணிக்கு வள்ளியூருக்கும், நள்ளிரவு 1.55 மணிக்கு நெல்லைக்கும், நள்ளிரவு 2.58 மணிக்கு கோவில்பட்டிக்கும், நள்ளிரவு 3.18 மணிக்கு சாத்தூருக்கும், நள்ளிரவு 3.43 மணிக்கு விருதுநகருக்கும், நள்ளிரவு 4.08 மணிக்கு அருப்புக்கோட்டைக்கும், மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு மானாமதுரைக்கும், அதிகாலை 5.38 மணிக்கு சிவகங்கைக்கும், அதிகாலை 6.05 மணிக்கு காரைக்குடிக்கும் 06.48 மணிக்கு புதுக்கோட்டை வந்தடைகிறது. மதியம் 1.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. 

ரெயிலில், 2 முதல் வகுப்புடன் இணைந்த 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 5 பொதுப்பெட்டிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கு

கிறிஸ்துமஸ் புத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு கேரளா, தென்மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வருவதற்கு சிறப்பு ரயில்!

மங்களூரு - தாம்பரம்(ஒரு வழி)  சிறப்பு ரயில் வழி புதுக்கோட்டை

 02.12.2023 முதல் 27.01.2024ஆகிய தேதிகளில் சனி கிழமை தோறும் இந்த சிறப்பு ரயில் மங்களூருவிலிருந்து காலை 10:00 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு  ஞாயிறு காலை 06:48 மணிக்கு வரும் தொடர்ந்து இந்த ரயில் தாம்பரத்திற்கு மதியம் 01:15 மணிக்கு சென்று சேரும்.

06065/மங்களூரு - தாம்பரம் சிறப்பு இரயில்(சனி)

மங்களூரு - 10:00 am சனி காலை புறப்படும்
காசர்கோடு - 10:45 am
கண்ணூர் - 11:57 am
கோழிக்கோடு - 01:27 pm
திருசூர்- 04:25 pm
எர்ணாகுளம் - 05:40 pm
கோட்டயம் - 06:50 pm
கொல்லம் - 08:57 pm
திருவனந்தபுரம் - 10:45 pm சனி
நாகர்கோவில் டவுன் - 12:05 am
வள்ளியூர் - 12:50 am
திருநெல்வேலி - 02:05 am
கோவில்பட்டி - 03:00 am
புதுக்கோட்டை - 06:48 am ஞாயிறு காலை
தாம்பரம் - 01:15 pm மதியம் செல்லும்

இவை தவிர இன்னும் பல முக்கிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் இன்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு தொடங்கிவிட்டது. பயன்படுத்திக்கொள்ளவும்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments