மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்
புதுக்கோட்டையில் மக்கள் மன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினர். மேலும் 84 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், நவீன காதொலிக்கருவி, மடக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் நடைபயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments