கட்டுமாவடி மார்க்கெட்டில் 2 திருக்கை மீன்கள் ரூ.16,800-க்கு விற்பனை
புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. அதேபோன்று இங்கிருந்து மீன்களும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. இங்கு அரிய வகை மீன்களும், ராட்சத மீன்களும் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து வந்த சரக்கு வாகனத்தில் இரண்டு ராட்சத திருக்கை மீன்கள் கொண்டுவரப்பட்டது. 56 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் கிலோ ரூ. 150 வீதம் 8,400- க்கு விற்பனையானது. இதேபோன்று மற்றொரு திருக்கையும் விற்பனையானது. இரண்டு திருக்கை மீனையும் சேர்த்து ரூ.16,800-க்கு விற்பனையானது. இந்த மீன்களை அறந்தாங்கியைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் ஏலம் எடுத்தார். இந்த மீன் ஒரு கிலோ 250 முதல் 300 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனையாகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments