சென்னை புயல் மழை எதிரொலி: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து






சென்னையில் நிலவி வரும் புயல், கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்திருக்கின்றது. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு

சென்னையில் நிலவி வரும் புயல், கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்திருக்கின்றது. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு
  
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 

தூத்துக்குடி - சென்னை இடையேயான முத்துநகர் ரயில் இன்று (டிச.4) ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் - தாம்பரம் ரயில், மதுரை - சென்னை தேஜஸ் ரயில் ஆகியனவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662),  நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692),  கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636),  கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் (12634), மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684), திருநெல்வேலி - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694),  விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை  எக்ஸ்பிரஸ் (22662), தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை  எக்ஸ்பிரஸ் (16752),  மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651),  திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606),  குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் கீழே வருமாறு; 

1.இன்று 4-ம் தேதி புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி அதிவிரைவு ரயில் (ரயில் எண்: 12671 ).

2. இரவு 10 மனிக்கு புறப்படும் சென்னை சென் ட்ரல் - கோயமுத்தூர் சேரன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12673)

3. சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் அதிவிரைவு ரயில் (ரயில் எண் 20601)


4. சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா அதிவிரைவு ரயில் (ரயில் எண் 22639)

5. சென்னை சென்ட்ரல் - மைசூரு காவேரி அதிவிரைவு ரயில் (ரயில் எண் 16021).

6. செங்கல்பட்டில் இருந்து இன்று பிற்பகல் 3.35க்கு புறப்படவிருந்த செங்கல்பட்டு - கச்சிகுடா அதிவிரைவு ரயில் (ரயில் எண் 17651)

7. இன்றிரவு 7.45 மணிக்கு புறப்படவிருந்து சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (ரயில் எண் 12623)

8. இன்றிரவு 10.50 மணிக்கு புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் -கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் (ரயில் எண் 12657)

9. இன்றிரவு 11 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு அதிவிரைவு ரயில் (ரயில் எண் 22649).

10. சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில். (ரயில் எண் 22651)

11. சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே இன்றிரவு 11.40 மணிக்குப் புறப்படவிருந்த ரயில் (ரயில் எண் 12027)

12. நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 16102) ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

 மேலும், நேற்றிரவு தென் மாவட்டங்களில் இருந்து சென்ற ரயில்கள் சற்று முன் தான் எழும்பூர் சென்றடைந்ததால் கடந்த பல மணி நேரமாக ரயிலில் பயணித்த பயணிகல் அத்தியாவசிய தேவைகளுக்காக பெரும் அவதியுற்றது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments