அறந்தாங்கி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி மரணம்
அறந்தாங்கி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

மாணவி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் கன்சிஹா (வயது 11). இவர் ஆவணத்தான்கோட்டை தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு மர்ம காய்ச்சல் இருந்ததால் சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கன்சிஹா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

7-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை

இதைபோல் இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-க்கும் மேற்பட்டோர் மதுரை, திருச்சி என தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து நோய் தொற்றை தடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் இதுவரை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறையோ எடுக்கவில்லை என்று கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments