மணமேல்குடியில் SDPI நடத்திய 31 ஆண்டு கால அநீதி என்கிற முழக்கத்தோடு மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
பாபரி மஸ்ஜித் தகர்ப்பு பாசிஸ எதிர்ப்பு தினம்-31 ஆண்டு கால அநீதி என்கிற  முழக்கத்தோடு SDPI கட்சி சார்பாக மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக மணல்மேல்குடியில் மாவட்ட தலைவர் U.செய்யது அகமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் A.அப்துல் ஜமில் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அறந்தாங்கி வடக்கு தொகுதி தலைவர் சேக் இஸ்மாயில் வரவேற்புரை ஆற்றி துவங்கி வைக்க மாவட்ட துணை தலைவர் பொன்மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது இக்பால், மாவட்ட செயலாளர் F.சாலிகு  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பேரவை சாவன்னா சாகுல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இறுதியாக மாவட்ட  செயற்குழு உறுப்பினர் M.செய்யது இப்ராஹிம் அவர்கள் நன்றியுரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

வெளியீடு
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments