பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் ெரயில் பாலம்: ஜனவரி மாதத்தில் புதிய தூக்குப்பாலத்தை பொருத்தும் பணி




பாம்பன் கடலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ரூ.545 கோடியில் நடைபெற்று வரும் இந்த பணிகளில் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் முடிவடைந்துவிட்டன. மற்றொரு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. மையப்பகுதியில் தூக்குப்பலத்தை பொருத்துவதற்கான பணிகள் நடைபெறுவதற்காக அந்த தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெறாமல் உள்ளது. மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலம் புதிய ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மீது நிறுத்தப்பட்டு இரும்பு கம்பிகளை வெல்டிங் செய்யும் பணி கடந்த 3 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. வருகின்ற ஜனவரி மாதத்தில் தூக்குப்பாலம் தூண்கள் வழியாக நகரும் கிரேன் மூலம் மையப்பகுதிக்கு கொண்டு சென்று பொருத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ஆர்.வி.என்.எல். உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் நிறுவப்பட உள்ள தூக்குப்பாலம் 70 மீட்டர் நீளமும், 600 டன் எடையும் கொண்டதாகும். புதிய தூக்குப்பாலம் நுழைவுப்பகுதியில் வைத்து வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது வெல்டிங் செய்யும் பணி நடந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாகவே நகரும் கிரேன் மூலம் நகர்த்தி மையப்பகுதியில் அமைக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளது. தற்போது மைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தூணில் நான்கு இணைப்புகளுடன் கூடிய 40 மீட்டர் உயரத்தில் டவர் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. மற்றொரு தூணில் டவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments