மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான வட்டார குறுவள மைய அளவில் பயிற்சி
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான வட்டார குறுவள மைய அளவில் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி   அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு  உறுப்பினர்களுக்கான பயிற்சியினை இப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு ஜேசுதாசன் அவர்கள் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வைத்தார்.  

பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு தேவைகள் , துணைக் குழுக்கள் பள்ளியில் அமைத்தல்,  பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், பள்ளியின் கட்டமைப்புகளை உருவாக்குதல், பள்ளி மேலாண்மை குழுவில் உள்ளாட்சியின் பங்கு பற்றியும்,  பள்ளிக் கல்வித் துறைக்கு பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு பற்றியும் போன்ற தலைப்புகளில் பயிற்சி விரிவாக வழங்கப்பட்டது.

இதே போல் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மா பட்டினம் ஆண்கள் நடுநிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பலவானநேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஆறு குறுவள மையங்களில் இன்று பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

இப் பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மதிப்பிற்குரிய திருசெழியன் மற்றும் மதிப்புக்குரிய திருமதி இந்திராணி ஆகியோர் பயிற்சியினை பார்வையிட்டார்கள்.

 இப்ப பயிற்சியில் 400 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

 இப்ப பயிற்சியினை கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி அங்கையற்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

 இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்  கண்ணன் கலந்து கொண்டார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments