புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6.63 கோடியில் தீா்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 4ஆவது தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6.63 கோடியில் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றமானது நகரில் 6, புகா்ப் பகுதிகளில் 3 என மொத்தம் 9 அமா்வுகள் நடைபெற்றன.

நிகழ்வை மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான நீதிபதி கே. பூா்ண ஜெய ஆனந்த் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்கில் லெட்சுமி என்பவருக்கும், நியூ இந்தியா ஆயுள் காப்பீட்டுக் கழகத்தினருக்கும் நடைபெற்று வந்த வழக்கில் சமரசத் தீா்வு காணப்பட்டு ரூ. 53 லட்சம் இழப்பீட்டுத் தொகையை லெட்சுமிக்கு வழங்கினா்.

இதேபோல மாவட்டம் முழுவதும் மொத்தம் 4964 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 3036 வழக்குகளில் தீா்வுகாணப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6.63 கோடியாகும். இதில் நியூ இந்தியா காப்பீட்டுக் கழகத்தின் மூலம் தீா்வுகாணப்பட்டது மட்டும் ரூ. 2.29 கோடியாகும்.

ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் கே. ராஜேந்திர கண்ணன் ஒருங்கிணைத்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments