மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பில் சென்னை மக்களுக்கு வழங்க 50 அரிசி பைகள் ஒப்படைப்பு!



மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பில் சென்னை மக்களுக்கு வழங்க 50 அரிசி பைகளை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு மிக்ஜாம் புயல் காரணமாக மழை பெய்து மழை தண்ணீர் தேங்கியதால் சென்னை மக்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள மக்களுக்கு அனைவரும் தாராளமாக உதவி செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். 

இதையடுத்து மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பாக 50 அரிசி பைகள் இன்று 10/12/2023 மீமிசல் வருவாய்த்துறைனரிடம் வழங்கப்பட்டு உள்ளது.


இந்நிகழ்ச்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments