புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவில் பொருட்கள் பெறும் வசதி அறிமுகம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கண் கருவிழி பதிவு

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் `ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை முனைய கருவிகளின் மூலம் கைரேகை பதிவு செய்யப்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கான மாதாந்திர பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் ஒருவர் சென்று கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக சிலரது கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியாமல் சிரமம் அடைவதும், கைவிரல் பதிவில் பயோமெட்ரிக் எந்திரம் சில நேரங்களில் பழுதாவதுமாக இருந்து வருகிறது. இதனால் கைரேகை பதிவுக்கு பதிலாக கண் கருவிழி பதிவு வசதி முதல்கட்டமாக குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ரேஷன் பொருட்களுக்கு பில்

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 30 ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வருபவர்களில் குடும்ப அட்டை உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது கண் கருவிழியை அந்த ஸ்கேன் கருவியில் காண்பித்து பதிவு செய்கின்றனர். இதில் அவர்களது விவரம் வந்ததும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு தற்போது பில்லும் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments