மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்




மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் கோரிக்கைகளை அலுவலா்கள் கவனமாகப் பரிசீலித்து நிதி நிலைக்கேற்ப விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, சமுதாயக் கூடங்கள் கட்டுதல், பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற கோரிக்கைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிடுபவற்றை, உரிய நிதி நிலைக்கேற்ப பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

அடிப்படை வசதிகளை செய்துத் தருவதில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மொ்சி ரம்யா.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், மாவட்டத் திட்டக் குழுத் தலைவருமான த. ஜெயலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments