காவதுகுடி ஊராட்சியில் ரூ.99 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்




புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா காவதுகுடி ஊராட்சியில் உள்ள தனி கொண்டான்-பட்டமங்கலம் செல்லும் 2 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ரூ.99 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். காவதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா சோனமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஒன்றிய குழுத்தலைவர் உமாதேவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமநாதன், சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கணேஷ் ராமையா, காங்கிரஸ் வட்டார தலைவர்கள் காணுர் விஸ்வநாதன், கூடலூர் முத்து மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அமரடக்கி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரவேலை உறுதி திட்டத்தில் ரூ.10.19 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமரடக்கி ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி ராஜா முன்னிலையில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments