மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனை
ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் புகையிலை மற்றும் போலி மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமணி, துரைமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களின் பதிவு எண்களையும் குறித்துக்கொண்டனர். இதேபோல் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டுகின்றனரா என்று சோதனை மேற்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments