தொண்டியில் ரூ.12.50 கோடியில் வளர்ச்சி பணிகள் பேரூராட்சி தலைவர் தகவல்




தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:- தொண்டி பேரூராட்சி மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகையை கொண்டதாகவும், வளர்ந்து வரும் வணிக நகரமாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற அதற்கான திட்ட அறிக்கைகளும் தயார் செய்யப்பட்டு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் செயலாளரிடம் நேரில் வழங்கி தேவையான நிதி உதவி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதன்படி பேரூராட்சி கட்டிடத்தில் ரூ.2.50 கோடியில் தினசரி மார்க்கெட், தொண்டி பழைய போலீஸ் நிலைய பகுதியில் ரூ.3 கோடியில் வாரச்சந்தை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கிழக்கு புறத்தில் ரூ.1.65 கோடியில் பூங்கா அமைக்கவும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தொண்டி கடற்கரையில் சிந்தாதிரி மாதா கோவில் எதிர்புறம் சிறுவர் பூங்கா, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வரை கடற்கரை சாலை ஓரம் தடுப்புச்சுவர் கட்டி பேவர் பிளாக் நடைமேடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.12.50 கோடியில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளரை சந்தித்து திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments