சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி: புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள கடலோரப்பகுதிகளில் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மாட்டார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments