பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர்கள் திருநாவுக்கரசர் M.P வலியுறுத்தல்
மத்திய-மாநில முன்னாள் அமைச்சரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சு. திருநாவுக்கரசர் எம்.பி. அவர்கள் மக்களவையில் நேற்று (18.12.23) கீழ் கண்ட பிரச்சனை குறித்து விதி எண் 377-ன் கீழ் இரயில்வே துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் 

தமிழ்நாடு மற்றும் எனது திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை இரயில்வே சேவைகளின் சில முக்கியமான நீண்ட காலக் கோரிக்கைகளை விதி 377-ன்கீழ் மக்களவைமுன் வைக்க விழைகிறேன்:-

1) TPJ-MNM பிரிவில், வெள்ளனூர் புதுக்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே கிமீ 452/900-453/000-ல் எல்சி எண். 372- திருவாப்பூரில் ஒரு ROB RUB கட்டும் பணி ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெறுவதற்காக நிலுவையில் உள்ளதையும்,

in) TPJ - MNM பிரிவில் வெள்ளனூர் - புதுக்கோட்டை ஸ்டேஷன்களுக்கு இடையே கி.மீ. 455/800-900-ல் எல்சி எண் 376- கருவேப்பலனில் ஒரு ROB RUB கட்டுவதற்கு முறையாக ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட மேம்பாலப் பணியை விரைவுபடுத்த வேண்டியும் கேட்டுக் கொள்கிறேன்.

மானாமதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு தினசரி ரயில், சிவகங்கை-காரைக்குடி அறந்தாங்கி - பேராவூரணி - மயிலாடுதுறை விழுப்புரம் வழியாக இயக்க வேண்டும்:

iv) மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16231/162320) ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்துவருவதாலும், மேலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாலும், புதிதாக திருச்சி பெங்களூரு தினசரி ரயில் வண்டி ஒன்று இயக்கவேண்டும்:

v) புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு திருச்சி - விழுப்புரம் வழியாக, தினசரி ரயில் இயக்கவேண்டும்:

vi) தஞ்சாவூர்-புதுக்கோட்டை இடையே (கந்தர்வகோட்டை (65 கி.மீ) வழியாக) புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்: அதை சர்வே செய்வதற்கு 2012-2013-லேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, சர்வே பணியை விரைவு படுத்தி முடிக்க வேண்டும்

vil) திருச்சியில் இருந்து 0600 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு மதியம் சென்றடைந்து, பின்னர் சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 2-30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலைக்குள் வந்துசேரும் வகையில் திருச்சி சென்னை இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளுக்கு முதன்மையான முன்னுரிமை அளித்து பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சு.திருநாவுக்கரசர், MPஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments