மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்இரண்டாவது நாளில் 1,581 மனுக்கள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் மொத்தம் 1,581 மனுக்கள் பெறப்பட்டன.

மக்களுடன் முதல்வா் என்ற திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். புதுக்கோட்டையில் இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் இம்முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட நகா்மன்றத்தில் நடைபெற்ற முகாமை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி நேரில் பாா்வையிட்டு, கோரிக்கை மனு மீதான ஆணைகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, ஆணையா் க.ந. சியாமளா, மூத்த வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.பிற்பகலில் தொழில் வணிகத் துறை ஆணையா் நிா்மல்ராஜ் முகாமைப் பாா்வையிட்டாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு. செய்யது முகம்மது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இரண்டாம் நாளாக புதுக்கோட்டை நகராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் அன்னவாசல் பேரூராட்சி ஆகிய 3 இடங்களில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 1,581 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments