பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக மயிலாடுதுறை - மதுரை இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம்
பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக மயிலாடுதுறை - மதுரை இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை  ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை  ஓய்வூதியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை  வட்டக்கிளையின் சார்பில் ஓய்வூதியர் தின விழா மற்றும் 75 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு பாராட்டு விழா பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.          

விழாவிற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் கண.கல்யாணம் தலைமை வகித்தார்.துணைத்தலைவர்  த.சந்திரமோகன் வரவேற்புரையாற்றினார். துணைத்தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்த பின்னர் மறைந்தவர்களுக்கு அஞ்சலி  செலுத்தப்பட்டது.தீர்மானங்களை முன்மொழிந்து செயலாளர் இரா.அண்ணாதுரை பேசினார்.  

75 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு பாராட்டுரை வழங்கி ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி திரு.வெ.அன்புச்செல்வன்  சிறப்புரையாற்றினார்.வட்டப் பொருளாளர் சோம.ஆறுமுகம் நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானங்கள்

1. சென்னை எழும்பூர் இராமேஸ்வரம் தினசரி இரவு நேர விரைவு இரயிலை இருமுனைகளிலிருந்தும் திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக இயக்க வேண்டும் 

2.மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் 

3.பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வழியாக திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் 

4.பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை வேண்டும் 

5.நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டுள்ள அரியலூர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதைகளுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments