புதுக்கோட்டை மாவட்டத்தில் 28-ந் தேதி மழை எச்சரிக்கை: மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி




புதுக்கோட்டைக்கு 28-ந் தேதி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

தென்மாவட்டங்களில் கன மழை

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புயல் வெள்ள நிவாரண பணிகளுக்கு அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டு, அதன் மூலம் மக்களை காப்பாற்றுகிற பணியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டிருக்கிறார். 4 தென்மாவட்டங்களில் மிக கடுமையான மழை பெய்துள்ளது. கடந்த 100 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு கூட மழையாக இருந்தாலும், அதில் இருந்து மக்களை காப்பாற்றுகின்ற முயற்சியில் அமைச்சர்களையும், அரசு துறை அதிகாரிகளையும் அனுப்பி மீட்பு பணியிலும், மக்களை பாதுகாப்பதிலும் முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

கப்பற்படை, விமானப்படை, தரைப்படை ஆகியவை மத்திய அரசிடம் இருப்பதால் அவர்களை அழைத்து தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக கவர்னர் ஆலோசனை நடத்தினால் நடத்தட்டும். அதுபற்றி ஒன்றும் இல்லை.

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற 28-ந் தேதி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ளவும், மக்களை காப்பாற்றவும் மாவட்ட நிர்வாகமும், அரசும் தயாராக இருக்கிறது. மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமலும் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் கலந்து கொண்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உரிய ஆணைகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார். முன்னதாக முகாமில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத் அலி, நகராட்சி ஆணையர் சியாமளா, முன்னாள் அரசு வக்கீல் செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments