புதுக்கோட்டைக்கு கனமழை எச்சரிக்கை இல்லை: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை பேரிடர் மேலாண்மை பிரிவு விளக்கம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் கன மழை பெய்ய உள்ளதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 21-ந் தேதி ஒரு நபர் வாட்ஸ்-அப் வழியாக வருகிற 27, 28-ந் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிக மழை பெய்யும் எனவும், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார். ஆனால் வானிலை எச்சரிக்கை மையத்திலிருந்து அவ்வாறான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு அதிகாரப்பூர்வமில்லாத தகவலை எண்ணி பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏதேனும் வானிலை எச்சரிக்கை வரப்பெற்றால் உடனடியாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments