அறந்தாங்கி ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையத்தை நிரந்தரம் ஆக்க கோரி திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளரை நேரில் சந்தித்து அறந்தாங்கி வர்த்தக சங்கம் கோரிக்கை
அறந்தாங்கி ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையத்தை நிரந்தரம் ஆக்க கோரி  திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளரை நேரில் சந்தித்து அறந்தாங்கி வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர் 

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி ரயில் நிலையத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் கணினி முன்பதிவு மையத்தை நிரந்தர மையமாக மாற்றக் கோரி அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவரும் தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினருமான திரு.எஸ்.காமராஜ் அவர்கள் திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர்* 

உயர்திரு.அன்பழகன் ஐ.ஆர்.டி.எஸ். அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
 
மேலும் அறந்தாங்கி மக்களின் ரயில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வர்த்தக சங்க முன்னாள் தலைவரும் திருச்சி ரயில்வே கோட்ட ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனை கமிட்டி உறுப்பினருமான திரு.ஏ.பி.ராஜ்குமார் வர்த்தக சங்க செயலாளர் வெ.தவசுமணி வர்த்தக சங்க பொருளாளர் திரு.எஸ்.சேக் அப்துல்லா அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க துணை தலைவர் திரு. எம்.ஆர்.எஸ்.சரவனண் ஆகியோர் உடன் இருந்தனர்.  

வர்த்தக சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் தெரிவித்தார்கள்.

News Credit : Thavsimani

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

1 Comments

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.