பனராஸ் (காசி) - கன்னியாகுமரி இடையே புதிதாக இயக்கப்படவுள்ள ‘காசி தமிழ் சங்கமம்’ விரைவு ரயில் நாளை டிசம்பர் 24 முதல் இயக்கம்      
 

கன்னியாகுமரி - பனாரஸ் இடையே புதிதாக இயக்கப்படவுள்ள ‘காசி தமிழ் சங்கமம்’ விரைவு ரயிலுக்கு புதன்கிழமை (டிச.20) முதல் முன்பதிவு தொடங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு - உத்தர பிரதேச மாநிலங்களுக்கிடையே உள்ள ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் கன்னியாகுமரி - பனாரஸ் (காசி) இடையே ‘காசி தமிழ் சங்கமம்’ எனும் பெயரில் வாராந்திர ரயில் சேவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (டிச.20) முதல் தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


பனாரஸ் - கன்னியாகுமரி இடையே ஞாயிற்றுக்கிழமை தோறும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயில் (எண் 16368) இயக்கப்படவுள்ளது. இதன் முதல் பயணிகள் சேவையாக பனாரஸில் இருந்து டிச.24-ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமாா்க்கமாக கன்னியாகுமரி - பனாரஸ் இடையே வியாழக்கிழமை தோறும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயில் (எண் 16367) இயக்கப்படும். இதன் முதல் பயணிகள் சேவை ரயில் கன்னியாகுமரியில் இருந்து டிச.28-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை (டிச.30) இரவு 11.35 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.

இந்த ரயில் நாகா்கோவில், திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், பலா்ஸா, ஜபல்பூா், மாணிக்பூா், பிரயக்ராஜ், வாரணாசி வழியாக இயக்கப்படும். இதில் 9 குளிா் சாதன பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுவகுப்பு பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி உள்ளன. இந்த ரயிலுக்கான பயணச்சீட்டை புதன்கிழமை (டிச.20) காலை 8 மணி முதல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments